இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர்  கங்குலியின் மனைவி சென்ற கார் கொல்கத்தா பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான போதும் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.  

 

கங்குலியின் மனைவி டோனா கங்குலி தனது மகளை பாடசாலையிலிருந்து  திருப்பி அழைத்து வந்து கொண்டிருந்தார். 

இதன்போது அவர்கள் வந்த  கார்   மீது பின்னால் வந்த லொரி பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் கார் அதிக அளவில் சேதமடைந்தது. ஆனால், கங்குலி மனைவி டோனா காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தாகுர்பிகுர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.