சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசார பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் பயிற்சில் ஈடுபட்டிருந்த நிலையில், திசார பெரேரா தலையில் பந்தடிப்பட்டு உபாதைக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசார பெரேராவிற்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும், பந்தடிப்பட்ட பகுதி மாத்திரம் மென்மைநிலை அடைந்துள்ளதாகவும், எவ்வாறாயினும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 8ஆவது சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு, நாளை இடம்பெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.