பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை ; இந்த அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது - சாணக்கியன்

Published By: Digital Desk 2

27 Feb, 2025 | 07:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வையே எதிர்பார்க்கிறோம். புதிய அரசியலமைப்பு வருமா, வராதா,  என்பதை அரசாங்கம் குறிப்பிட  வேண்டும். பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இம்முறையும் சாதகமான  தீர்வினையோ, அல்லது  புதிய முன்மொழிவுகளையோ முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் இராசமாணிக்கம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்   மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத் தொடர் தற்போது நடைபெறுகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவுக்கு சென்று பல விடயங்களை கூறியுள்ளார். ஆனால் பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த காலங்களில் செய்த விடயங்களை விட புதிய அரசாங்கத்தின் புதிய முன்மொழிவுகள் எதனையும் கூறவில்லை.வடக்கு கிழக்கு மக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

எம்மக்களை  கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் செய்ததை  போன்றே  தற்போதைய  அரசாங்கமும் செயற்படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட பொறிமுறைகள் தொடர்பில்  வெளிவிவகார  அமைச்சர் தற்போது  கூறியிருந்தாலும் இவை அனைத்தும் தமிழ் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிராகரித்த பொறிமுறைகளாகும்.

இதேவேளை வடக்கு மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர். உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆனால் அது தொடர்பில் இன்று வரையில் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை புதிய அரசியலமைப்பில் நிரந்தரப் பெயராக உள்ளடக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

அமைச்சர் சந்திரசேகரனின் ஒன்றை கேட்கின்றேன். வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எதிர்பார்க்கின்றனர். அதுபற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். அதிகார பகிர்வை விடுவோம். ஆனால் புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? வந்தால் அதில் உள்ளடக்கம் என்ன?

பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகளும் இன்றைய விவாதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையில் பொறுப்புக் கூறல் என்பது மிகவும் பிரதானமான விடயமாகும். ஆனால் வெளிவிவகார அமைச்சர் எந்த சாதகமான பதிலையும் வழங்கவில்லை. இதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள்  தக்க பதிலளிப்பார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48