அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மரங்களை வெட்டி லொறியில் ஏற்றிச்செல்ல முற்பட்ட இருவரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கித்துல்கல மீகத்தென்ன வனப்பகுதியிலே நேற்று இரவு மரக்குற்றியுடன் புறப்பட தயாராகவிருந்த லொறியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மரக்குற்றியுடனான லொறியையும் இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மரக்குறியின் பெறுமதி தொடர்பில் வனபாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிக்கையை கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.