ஜா - எல துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு சந்தேக நபர் கைது

27 Feb, 2025 | 11:12 AM
image

ஜா - எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த 20 ஆம் திகதி  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று புதன்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் 20 ஆம் திகதி இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர், கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் ராகம வல்பொல பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  ராகம வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் ஆவார். 

சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:21:47
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:21:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 10:05:04
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54