மகா சிவராத்திரியில் ஆற்றலை பெறுவதற்கான சூட்சமங்கள்..

26 Feb, 2025 | 05:23 PM
image

வருடம் தோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் அருகில் இருக்கும் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், அலங்காரங்களும் நடைபெறும். இதில் எம்முடைய பக்தர்கள் பங்கு பற்றி சிவபெருமானின் அருளைப் பெற தயாராக இருப்பார்கள்.

இந்நிலையில் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ புராணத்தை வாசித்தோ அல்லது மற்றவர்கள் வாசிப்பதை கேட்டோ இரவினை கண் துஞ்சாமல் கடத்துவார்கள். 

இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்ட இந்த திகதியில் பிரபஞ்சத்தின் பேராற்றல் எமக்கு பரிபூரணமாக கிடைப்பதற்கான சூட்சும நேரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே நேர வித்தியாசம் என்பது 30 நிமிடங்கள் என்பதால்.. இதனை துல்லியமாக அவதானித்தால்... இன்று இரவு 12 மணி 15 நிமிடத்தில் இருந்து ஒரு மணி வரை பேராற்றலை நாம் பெற தயாராக இருக்க வேண்டும்.

இந்த தருணத்தில் வெட்ட வெளி-  மொட்டை மாடி - சிவாலயம் - ஆகிய இடங்களில் அமர்ந்து முதுகெலும்பு நேராக நிற்கும்படி அமர்ந்து 'சிவாய நமக சிவாய நமக' எனும் மந்திரத்தை இந்த 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக உச்சரிக்கும் போது இந்த பிரபஞ்சத்திலிருந்து உங்களுக்கான பேராற்றலை பெற முடியும்.  இதை தவற விடாதீர்கள்.

அதே தருணத்தில் எம்மில் பலரும் இந்த திகதியில் தான தர்மங்கள் செய்தால் பன்மடங்கு பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பணத்தை கொடுத்தால் ' ஓம் ஹரீம் ஹம் நமஹ' என்ற மந்திரத்தை  குலதெய்வத்தையும், மகாலட்சுமியையும் மனதில் தியானித்து கொடுத்தால்.. நீங்கள் கொடுத்த பணம் பன்மடங்கு பெருகி உங்களிடமே வந்து சேரும். இந்த மந்திரத்தை இன்றிலிருந்து தொடங்கலாம். 

வெள்ளிக்கிழமைகளில் இருந்தும் தொடங்கலாம் அல்லது நீங்கள் எப்போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதில் உச்சரித்து பணத்தை கொடுக்கிறீர்களோ.. அந்த பணம் பன்மடங்கு பெருகி உங்களிடமே வந்து சேரும் அதிசயத்தை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35
news-image

கல்வியில் இருக்கும் தடையை அகற்றுவதற்கான சூட்சும...

2025-03-10 16:53:16
news-image

2025 ராகு - கேது பெயர்ச்சிப்...

2025-03-10 14:37:26
news-image

நிம்மதி ஏற்படுவதற்கான சூட்சம பரிகாரம்..!?

2025-03-09 13:12:58
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண...

2025-03-07 17:56:13