உலக அளவில் ஒரு லட்சம் மக்களில் தோராயமாக 1800 பேருக்கு புராஸ்டேட் வீக்க பாதிப்பு ஏற்படுவதாக அண்மை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இத்தகைய பாதிப்பு கூடுதலாக ஏற்படுவதாகவும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நவீன லேசர் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆண்களின் சிறுநீர் பையின் கழுத்துப் பகுதியில் புராஸ்டேட் எனும் சுரப்பி உள்ளது. இந்த சுரப்பி பல்வேறு காரணங்களால் வீக்கம் அடைந்து சிறுநீர் வெளியேறுவதில் கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் முதல் கட்டமாக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்குவார்கள்.
அதன் பிறகும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் லேசர் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இத்தகைய தருணங்களில் TURP சர்ஜேரி எனும் சத்திர சிகிச்சையும் மேற்கொண்டு நிவாரணம் தருவர்.
சிலருக்கு எண்டோஸ்கோபிக் எனும் கருவி மூலம் லேசரை செலுத்தி புராஸ்டேட் வீக்கத்தை சீரமைப்பர். இதன் மூலம் இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும். மேலும் இத்தகைய நவீன லேசர் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோயாளிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவர்.
வைத்தியர் குரு பாலாஜி - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM