மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை,

 இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.