கடலுக்கு தொழிலுக்காகச் சென்ற நீர்கொழும்பு மீனவர்கள் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். 

ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம்  21 ஆம் திகதி பெரிய படகொன்றில் தொழிலுக்காகச் சென்றவர்களே காணாமல் போயுள்ளனர். 

நீர்கொழும்பு கதிரானை மற்றும் முன்னக்ரை பிரதேசங்களைச் சேர்ந்த டி. சத்துரங்க பெர்னாந்து,  ரத்னபால பெர்னாந்து, கே.எஸ்.வசந்த பெர்னாந்து, குமார மதுசங்க, கே.என்.காமினி பெர்னாந்து, என். விஜேசிறி ஆகியோரே காணாமல்போயுள்ள மீனவர்களாவர். 

விஜய - 2 என்ற படகில் இவர்கள் கடற்றொழிலுக்காகச் சென்றுள்ளனர். கடந்த மாதம்  21 ஆம் திகதி கடலுக்குச் சென்றுள்ள இவர்களுடனான தொடர்பு 25 ஆம் திகதி முதல் நின்று போயுள்ளது. 

இந்த படகின் உரிமையாளர் டப்ளியு. ஏம்.எம். ரொமிலஸ் பெர்னாந்து என்பவராவார். காணாமல்போயுள்ள மீனவர்களை தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.