சம்­பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார துடுப்­பாட்டத்­தினால் இந்­திய அணி தோல்­வியை தழு­வி­ய­தை­ய­டுத்து இந்தத் தொடர் திறந்த தொட­ரா­கி­யுள்­ளது.

'பி' பிரிவில் இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறு­கி­றதோ அந்த அணி அரை­யி­று­திக்குத் தகுதி பெறு­மாறு தொடர் மாறி­யுள்­ளது. இது அன்று பாகிஸ்தான் தென்­னா­பி­ரிக்­காவை வீழ்த்­தி­ய­தாலும் இலங்கை அணி திட்­ட­மிட்டு முதலில் இந்­தி­யாவை துடுப்­பெ­டுத்­தாட அழைத்து 350 ஓட்­டங்­கள் ­வ­ரையில்  உயர்ந்­தி­ருக்க வேண்­டிய ஓட்ட எண்­ணிக்கையை 321 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்தி பிறகு இலக்கை வெகு எளி­தாக விரட்டி வெற்றி பெற்­ற­தாலும் ஏற்­பட்­டுள்ள நிலை­யாகும்.

சம்­பியன்ஸ் கிண்ணம், பர­ப­ரப்­பான கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. 'ஏ' பிரிவை விடஇ -'பி' பிரி­வில்தான் அதி­க­மான போட்டித் தன்மை கொண்ட போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இலங்கை, தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணி­க­ளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்­ளி­க­ளுடன் உள்­ளன.

இலங்­கை­யு­ட­னான போட்­டியில் எளி­தாக வென்று, -'பி' பிரிவில் முதல் அணி­யாக இந்­தியா அரை­யி­று­திக்குள் செல்லும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. 

ஆனால், அதைத் தவி­டு­பொ­டி­யாக்கி அதிர்ச்­சி­ய­ளித்­துள்­ளது இலங்கை. பலம் வாய்ந்த தென்­னா­பி­ரிக்க அணியை பாகிஸ்தான் அசைத்துப் பார்த்­து­விட்­டது. இந்த இரண்டு திருப்­பு­மு­னை­களும் 'பி' பிரிவில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள போட்­டிகளை பரபரப்பாக்கிவிட்டன.

அடுத்­த­தாக இந்­தியா -– தென்­னா­பி­ரிக்கா, பாகிஸ்தான் –- இலங்கை அணிகள் மோத உள்­ளன. 

இந்த இரண்டு போட்­டி­க­ளுமே, கிட்­டத்­தட்ட காலி­று­திச்­சுற்று போல்தான் அமையும். இந்தப் போட்­டி­களில் வெல்லும் அணிகள் மட்­டுமே அரை­யி­று­திக்குச் செல்ல முடியும்.

 இந்தப் போட்­டிகள் மழையால் பாதிக்­கப்­பட்டால், அரை­யி­று­திக்குச் செல்ல ஓட்ட விகிதம் முக்­கி­ய­மான ஒன்­றாகப் பார்க்­கப்­படும். 

இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு அணி­க­ளுக்கும் எதி­ரான போட்­டி­களிலும் 300 இற்கும் அதி­க­மாக ஓட்டங்களை குவித்­துள்­ளது. இதனால், சிறந்­த­தொரு ஓட்ட விகி­தத்தை இந்­திய அணி தக்­க­வைத்­துள்­ளது. குறிப்­பாக, இலங்கை அணி­யுடன் தோல்­வி­ய­டைந்த போதும் ஓட்ட விகிதம் சிறப்­பாக உள்­ளதால், இந்­திய அணி '-பி' பிரிவில் தொடர்ந்து முத­லி­டத்தில் உள்­ளது.

ஆனால், அரை­யி­று­திக்கு முன்­னேறபலம் வாய்ந்த தென்­னா­பி­ரிக்க அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்­டா­யத்தில் இந்­தியா உள்­ளது. 

இரண்டு பிரி­வு­க­ளி­லுமே எஞ்­சிய ஆட்­டங்கள் அனைத்தும் லீக் சுற்றைப்போல் இல்­லாமல், காலி­று­திச்­சுற்­று­போ­லத்தான் இருக்கும். ஒவ்வொரு அணியும் அரை­யி­று­திக்குள் செல்ல கடு­மை­யாகப் போரா­டி­யாக வேண்டும்.

இதில், இங்கிலாந்து அணி மட்டும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சற்று நெருக்கடி இல்லாமல் ஆடலாம். இங்கிலாந்து அணிக்குதான் அது சம்பிரதாயப் போட்டியாக இருக்கும். அவுஸ்திரேலியாவுக்கு அது வாழ்வா... சாவா போட்டிதான்.