இன்றைய சூழலில் ஆட்டிசம் எனப்படும் புலன் இயக்க குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது சென்சரி ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புலன் இயக்க தூண்டுதலுக்கான நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக இத்துறை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு ஏற்படும் பிறவி குறைபாட்டிற்கான அறிகுறியை விரைவாக கண்டறிந்து, அவர்களுக்கு முறையான சிகிச்சையை வழங்கினால் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களால் மற்ற ஆரோக்கியமான பிள்ளைகளைப் போல் வளரவும், வாழவும் இயலும். ஆனால் சில பிள்ளைகள் பார்த்தல், தொடுதல், கேட்டல், நறுமணத்தை முகர்தல், சுவையை உணர்தல் உள்ளிட்ட பல்வேறு புலன் சார்ந்த செயலாக்கங்களில் பாரிய பின்னடைவுடன் பிறக்கிறார்கள். இவர்களுக்கு தற்போது மசாஜ் , இசை மூலமாக சிகிச்சை உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
பார்வை, செவிப்புலன், நறுமணம், சுவை, தொடுதல், கூட்டு புலன் உணர்வு, சமநிலை இயக்கம் உள்ளிட்ட புலன் சார்ந்த விடயங்களில் பிள்ளைகளுக்கு குறைபாடுகள் இருந்தால் அதனை துல்லியமாக அவதானித்து அதற்கென பிரத்யேக சிகிச்சை நிபுணர்களிடம் தொடர்ச்சியாக நிவாரண சிகிச்சையை பெற்றால் அவர்களால் ஏனைய இயல்பான குழந்தையைப் போல் வளர முடியும். ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி என பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் தற்போது சென்சரி ஸ்டிமுலேஷன் தெரபி என்னும் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் புலன் தூண்டப்பட்டு நிவாரணம் கிடைக்கிறது. அதாவது கேட்பது , தொடுவது, பார்ப்பது, முகர்வது , உள்ளிட்ட பல்வேறு புலன்களை இத்தகைய நவீன சிகிச்சை மூலம் அவர்களிடத்தில் தூண்டலாம். இந்த சிகிச்சையில் உள்ள நகரும் விளக்குகள் , புகைப்படங்கள் அனைத்தும் அவர்களுக்கு நிவாரணத்தை விரிவாக வழங்க உதவுகிறது.
மேலும் இத்தகைய சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் போது புலன் செயலாக்க கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. அத்துடன் புலன்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் இத்தகைய தூண்டுதல் சிகிச்சை வழி வகுக்குகிறது. இத்தகைய சிகிச்சை தொடரும்போது பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நரம்பு மண்டலம் அவர்களின் சுழலுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எதிர்வினை ஆற்றுகிறது. மேலும் மூளையின் உணர்வு தூண்டுதல்களை செயலாக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான முறையில் உதவி செய்கிறது. இதனால் இத்தகைய சிகிச்சைக்கு தற்போது வரவேற்பு அதிகரித்திருக்கிறது.
வைத்தியர் அஸ்வினி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM