உடன்­பி­றப்­புக்­க­ளான அண்­ணனும் தங்­கையும் திரு­மணம் செய்து கொண்டு மறைந்­தி­ருக்­கையில்  அவர்கள் இரு­வரும்  பொலி­ஸாரால் கைது  செய்­யப்­பட்ட சம்­ப­வ­மொன்று நேற்று வெள்­ளிக்­கி­ழமை கேகா­லையில் இடம்­பெற்­றுள்­ளது.

இவர்­களில் தங்கை கள­னிப்­பி­ர­தேச பெறாத பெற்­றோர்­களால்  சிறு வய­தி­லி­ருந்து தத்­தெ­டுத்து வளர்க்­கப்­பட்­டவர் என்றும் தற்­போது அவ­ருக்கு வயது 21 எனவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

பெறாப் பெற்­றோரின்  அர­வ­ணைப்பில்  வளர்க்­கப்­பட்ட இந்த இளம் பெண்­ணின் சகோ­தரன் பல இடங்­க­ளிலும்  தேடி ஒரு­வாறு  தனது சகோ­த­ரியை கண்டு பிடித்­துள்ளார்.

இரு­வரும் இரத்த உறவு சகோ­த­ரர்கள் என்­பதால் இந்த யுவ­தியை வளர்த்­த­வர்­களும் மேற்­படி இரு­வ­ருக்கும்  எவ்­வித  கட்­டுப்­பாடுகளையும் விதிக்­க­வில்லை. 

இரு­வரும் பல இடங்­க­ளுக்கும் சுதந்­தி­ர­மாக போய் வந்­துள்­ளனர்.

எனினும் கடந்த சில தினங்­க­ளுக்கு முன் வெளியேறிச் சென்ற  இரு­வரும் வீட்­டுக்கு திரும்பி வரா­மையால்  பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு பெற்றோர் அறி­வித்­துள்­ளனர்.  இறு­தி­யாக கேகா­லையில் கிராமப் பகு­தி­யொன்றில் இவர்கள் மறைந்­தி­ருக்கும் விடயம் தெரியவந்­துள்­ளது. 

இரத்த உறவு சகோ­த­ரர்கள் என்­பதால் திரு­மணச் சட்­டத்­திற்­கி­ணங்­கவும் சமய சம்பிரதாயங்களுக்கிணங்கவும் திருமணம் செய்ய முடியாதென்பதால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளர்.