(எம்.மனோசித்ரா)
புத்தாண்டு காலத்தில் சதொச ஊடாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
புத்தாண்டு காலத்தில் சதொச ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு நிவாரண விலையொன்றை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு திட்ட உரையிலும் ஜனாதிபதி இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பாராளுமன்றத்தில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை நிவாரண விலையில் புத்தாண்டு காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM