அமெரிக்காவிலிருந்து இன்று நாடு திரும்பவுள்ள  பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவுக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்தே இந்த வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 28 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். 

ஒருவாரகாலம் வைத்தியசாலையில் தங்கியிருந்து மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில்  இன்று பிற்பகல் பிரதமர் நாடு திரும்புகின்றார்.

பிற்பகல் 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பிரதமர் உடல் நலம்பெறவேண்டும் என்று வேண்டி பிரதமர் அலுவலகத்தினால் ஆலயங்களில் மதவழிபாடுகள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.