கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை ( 25) இடம்பெற்ற ஒன்று கூடல் கி.செ. துரையின் உலகச் செய்திகள் என்ற சஞ்சிகையின் வெளியீடு மற்றும் விமர்சன அரங்காக அமைந்தது .
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி திருக்குமரன் அஞ்சலோ பெலினி நெறிப்படுத்தினார்.
உலகச் செய்திகள் சஞ்சிகைக்கான விமர்சன உரைகளை விஞ்ஞான நெறி ஆசிரியர் மாணவர் இலகுநாதன் செந்தூர்ச் செல்வன், ஆங்கில நெறி ஆசிரிய மாணவி நிரோஜன் கௌசிகா கிறிஸ்தவ நெறி ஆசிரிய மாணவி சுதாகர் கமலினி ஆகியோர் நிகழ்த்தினர்.
கலாசாலையின் பழைய மாணவரும் (1980/81) பிரபல ஊடகவியலாளருமாகிய கே.எஸ். துரை - ஆசிரியரால் முடியுமா? என்ற பொருளில் ஊக்குவிப்பு உரை (motivational speech) ஆற்றினார்.
கலாசாலை அதிபர் ச. லலீசன் நிறைவுரை ஆற்றினார்.
உலகச் செய்திகள் இதழின் முதற்பிரதியை ஆசிரியர் கி. செ. துரை கலாசாலை அதிபரிடம் கையளித்தார்.
52 பக்கங்கள் கொண்ட உலகச் செய்திகள் சஞ்சிகை கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM