“சமுத்திரத்திற்குப் புத்துயிரளித்தல், வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புதல்” ; எல்.பீ. ஃபினான்ஸ் மற்றும் NARA அமைப்பின் கூட்டு முயற்சி

25 Feb, 2025 | 02:02 PM
image

கடலோரச் சுற்றாடல் அமைப்புகளில் உள்ளடங்கும் பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள், வாவிகள் மற்றும் கழிமுகங்கள் அவற்றின் வளமான பல்வகை உயிரின பிரசன்னத்தினால் மகத்தான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன. 

அவை அனைத்திலும், பவளப்பாறைகள் குறிப்பாகத் தனித்துவமான இடத்தை வகிக்கின்றன. எனினும், உலகளாவிய சுற்றாடல் நிலைமை மாற்றங்கள், மாசடைதல், மனித செயற்பாடுகள் மற்றும் சில வகை மீன் இனங்கள் மிதமிஞ்சிய அளவில் பிடிக்கப்படுமல் போன்ற காரணங்களினால், இச் சுற்றுச்சூழல் அமைப்பு பெரிதும் நாசமாக்கப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, பரம்பரை பரம்பரையாக இந்த மூலவளங்களில் தங்கியிருந்த சமூகங்களுக்கு கணிசமான சுற்றாடல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. 

குறிப்பாக, அலங்கார மீன் வகைகளைப் பிடிப்பதிலும் விற்பதிலும் ஈடுபட்டுள்ள குழுவினர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த விடயங்களைக் கருத்திற்கு எடுத்துக்கொண்ட எல்.பீ. ஃபினான்ஸ், கடல் சார்ந்த பல்வகை உயிரின அமைப்பை மீட்டுக்கொள்ளுதல், உள்ர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், நீண்டகால அடிப்படையிவ் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணி வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் பேண்தகு தன்மையுள்ள ஒரு செயற்றிட்டத்தை விருத்தி செய்யும் பொருட்டு தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்துடன் (NARA) தொடர்புகொண்டது. 

இதன் பிரகாரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வர்ண மீனினங்களுக்குச் செயற்கை வாழிடங்களை உருவாக்குவதன் மூலமும் பவளப்பாறைகளைச் செய்கை பண்ணுவதன் மூலமும் தேவேந்திரமுனை கரையோரப் பகுதியில் பல்வகை உயிரினத் தொகுதியை மேம்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வர்ண மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டதாக இருக்கும். இப் பகுதிக்கு வெளியே பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், ளுழெசமநடiபெ சுழியோடல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டுப் பயணிகளை கவர்வதன் மூலம் இந்த வேலைத்திட்டம் இப் பிரதேசத்தில் பேண்தகு தன்மையான சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கும் உதவும். சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் உள்;ர்வாசிகளின் வாழ்க்கைத் தரமும் முன்னேறும்.  

இந்த வேலைத்திட்டத்திற்கு எல்.பீ. ஃபினான்ஸ் நிதியுதவி வழங்கும் அதே சமயத்தில், வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்திற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை NARA வழங்குகின்றது. அத்துடன், இப் பிரதேசத்தின் முகாமைத்துவமும் பாதுகாப்பும், சமூக அடிப்படையிலான முகாமைத்துவ நடைமுறைகளைப் பயன்படுத்தி, மீன்பிடித் திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.   

இம் முன்முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி Nயுசுயு நிலையத்தில் கைச்சாத்திடப்பட்டது. NARA அமைப்பின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி, எல்.பீ. ஃபினான்ஸின் வியாபார அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளர்  சமீர வன்னிநாயக்க ஆகியோர் இதில் கையொப்பமிட்டனர். இம் முன்முயற்சி தொடர்பில், எல்.பீ. ஃபினான்ஸ் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் நிரோஷன் உடகே அவர்களுக்கு விசேட நன்றிகள் உரித்தாகும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

TATA, Mercedes-Benz வாகனங்களுக்கு பிரத்தியேக நிதியுதவி...

2026-09-09 18:24:31
news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49