(க.கிஷாந்தன்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி தோட்டத்தில் ஏற்பட்ட குழு மோதலில் 5 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் நேற்று தைப்பொங்கல் தினத்தன்று இராமர் பஜனை மற்றும் சப்பரம் எடுக்கப்பட்டு தோட்டத்தை வலம்வரும் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது.

இந்த மோதலில் ஒருவர் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை மோதலில் சம்மந்தப்பட்ட 5 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அட்டன் நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.