தேவன்பிட்டி  வெள்ளங்குளம்  பகுதியில்  சக நண்பர்களுடன்   ஆற்றைக் கடக்க  முற்பட்ட  சிறுவன் ஒருவர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

 ஆற்றைக் கடக்கமுற்பட்ட குறித்த சிறுவன் ஆற்றுநீரில் மூழ்கியதையடுத்த ஊர்மக்களால்  மீட்க்கப் பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அம்பியூலன்ஸ் வண்டியில்  கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் தேவன்பிட்டி  வெள்ளங்குளத்தை சேர்ந்த  ஏழு வயதான அருள்ஞானம்  அருள்விஜிந்தன்  என்ற  சிறுவனே  உயிரிழந்துள்ளார்.

சிறுவனது சடலம்  மரண விசாரணை அதிகாரின் பரிசோதனையின் பின்னர்  மன்னர் பொலிசாரின்  விசாரணைகளுடன்  இன்று  கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்து உறவினர்களிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.