(ஆர்.யசி)

இலங்கையில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலை கல்வியை பெறாது உள்ளதாகவும் மலையக மற்றும் கிராமிய பகுதிகளில் வாழும் சிறுவர்களே இந்த நிலைமையை எதிர்கொண்டு வருவதாக தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 

இலங்கையின் கல்வி மட்டம் உயரிய அளவில் உள்ள போதிலும் இந்த நாட்டில் பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 52 ஆயிரத்து  661 என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டுக்கான மாணவர் கணக்கெடுப்பு அறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்டாயமாக பாடசாலை செல்லவேண்டிய வயது எல்லையான 5-17 வயது வரையிலான மாணவர்கள்  4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 பேர் இவ்வாறு பாடசாலை கல்வியை பெறமுடியாது உள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் 51 ஆயிரத்து 249 பேர் எந்தவொரு ஆரம்பக் கல்வியையும் கற்காத சிறுவர்கள் எனவும் அடையாளபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.