இன்றைய திகதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சிறுநீர் தொற்று பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் தற்போது ஹெமாட்டூரியா எனும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் தொற்று பாதிப்பிற்கு நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரக பாதையின் அளவு குறைவாக இருப்பதால் அடிக்கடி தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
அடிவயிற்று பகுதியில் வலி, சிறுநீர் கழிக்கும் பகுதியில் எரிச்சல், இயல்பான அளவைவிட அதிக அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிலருக்கு சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல், சிறுநீரின் நிறம் மாறி இருப்பது.. இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அவர்களுடைய சிறுநீர் பாதையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதியாக அவதானிக்கலாம்.
இந்த தருணத்தில் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று மகப்பேறு வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
அவர்கள் குருதி பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
இந்தத் தருணத்தில் சிலருக்கு மைக்ரோஸ்கோபிக் ஹெமாட்டூரியா என்ற பாதிப்பும் ஏற்பட்டிருக்கக்கூடும். அதாவது சிறுநீரில் குருதியின் துகள்களும் கலந்து வெளியேறும்.
இதனைத் தொடர்ந்து சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது குறித்த பரிசோதனையும் வைத்தியர்கள் பரிந்துரைப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி முழுமையாக நிவாரணத்தை அளிப்பார்.
வைத்தியர் அனிதா - தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM