ஓஸ்டியோஓர்த்தரைடீஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 80 சதவீதத்தினர் குதிகால் வலியால் அவதிப்படுகின்றனர். 40 வயதிற்கு மேற்பட்டவர்களை இது பாதிக்கும் என்றாலும் ஒரு சிலருக்கு 3 வயது முதல் 12 வயதிற்குள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இத்தகைய வலி உள்ளவர்கள் பெரும்பாலும் வெதுவெதுப்பான சூடுநீரில் தங்கள் பாதங்களை சிலநிமிடங்கள் வரை வைத்துக் கொண்டு நிவாரணம் காண்பர். ஆனால் இவர்களுக்கு தற்போது புதிய சிகிச்சையொன்று அறிமுகமாகிறது.

ஓஸ்டியோஓர்த்தரைடீஸ் (osteoarthritis ) எனப்படும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மூட்டுகளை சீராக்குவதற்காக protein rich plasma எனப்படும் பி ஆர் பி என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் போது எம்முடைய இரத்த நாளங்களில் இருந்து எடுக்கப்படும் குருதியை இதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் விசேடகருவியின் வழியாக சுத்திக்கரிக்கப்படும் போது கிடைக்கும் புரோட்டீன் பிளாஸ்மாவைக் கொண்டு சிகிச்சையளிக்கிறோம். 

இதனால் பெண்களுக்கு ஏற்படும் குதிகால் வலி, டென்னிஸ் எல்போ எனப்படும் முழங்கை மூட்டு வலி ஆகியவற்றை முழுமையாக குணப்படுத்தப்படுகிறது. 

Dr. ஜாஹிர் உசேன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்