(நெவில் அன்தனி)
கொழும்பு கால்பந்தாட்ட லீக்கை புதுப்பொலிவு அடையச் செய்யவுள்ளதாக லீக்கின் புதிய தலைவர் எம்.ஐ. அன்தனி மணிவண்ணன் தெரிவித்தார்.
கொழும்பு கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் சகல கழகங்களையும் நிதி ரீதியாக பலமடையச் செய்வதே தனது முதுலாவது பணி என கொழும்பு கால்பந்தாட்ட லீக் தலைவராக போட்டியின்றி தெரிவான பின்னர் மணிவண்ணன் கூறினார்.
'கொழும்பு கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு போதிய நிதி வசதி இல்லாததால் அவற்றை நிருவகிப்பதில், வீரர்களைத் தக்கவைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றது. எனவே ஒவ்வொரு கழகத்துக்கும் சிறிய அளவிலேனும் அனுசரணைகளைப் பெற்றுக்கொடுத்து அவற்றைப் பலப்படுத்த எண்ணியுள்ளேன். அது மட்டுமல்லாமல் நிருவாகத்தில் நுட்பத்திறனை வளர்ப்பதற்கான பாடநெறிகளையும் நடத்தவுள்ளேன்.
'அத்துடன், கொழும்பு கால்பந்தாட்ட லீக்கில் இந்த வருடத்திற்கான நாட்காட்டியை (போட்டி அட்டவணை) தயாரிப்பது மற்றொரு முக்கிய விடயமாகும். நோண்பு மற்றும் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவடைந்தவுடன் கொழும்பு லீக் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலும் ஏப்ரல் மாத இறுதியில் போட்டிகள் ஆரம்பிக்கப்படும்' என்றார்.
கொழும்பு கால்பந்தாட்ட லீக்கின் வருடாந்தப் பொதுக்கூட்டம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன கேட்போர்கூடத்தில் கடந்த சனிக்கிழமை (22) நடைபெற்றபோது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிருவாக சபை உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தெரிவாகினர்.
நிருவாகிகள்
தலைவர்: எம்.ஐ. அன்தனி மணிவண்ணன் (செலஞ்சர்ஸ் கழகம்)
செயலாளர்: ஸஹரான் சின்ஹவன்ச (நியூ ஸ்டார் கழகம்)
பொருளாளர்: எம்.வை.எம். சிப்றிகான் (புதுக்கடை யுனைட்டட் கழகம்)
உதவித் தலைவர்கள் (7): எம்.எஸ்.எம். பாயிஸ் (மட்டக்குளி கழகம்), எம்.எஸ்.எம். அப்சால் (எவ்.சி. கொலோன்ஸ்), எம்.ஏ. ஆதில் (ஓல்ட் ஹமீடியன்ஸ் கழகம்), எம்.டபிள்யூ.எம். நஸார் (கிருலப்பனை யுனைட்டட் கழகம்), சுதத் கருணாதிலக்க (ஓல்ட் ஜோசப்பியன்ஸ்), ஷெஹான் சில்வேரா (ரட்னம் கழகம்), ரி. ஸ்ரீகாந்தன் (எவரெடி கழகம்).
உதவி செயலாளர்கள்: (2): எம். இராஜேந்திரன் (நிருவாகம் - எப்.சி. ஓல்ட் ஹிண்டுய்ஸ்ட்ஸ்), என்.எம். அனாஸ்தீன் (வெலன்சியா கழகம்).
உதவிப் பொருளாளர்: எம்.ஜே. டிலூக்க பெரேரா (ஓல்ட் பென்ஸ்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM