ஐ.சி.சி.யின் ஹோல் ஒவ் பேம் விருது இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஐ.சி.சி.யின்  அதியுச்ச கௌரவமான வாழ்நாள் சாதனையாளர் விருதான ஹோல் ஒவ் பேம் விருது இம்முறை நான்கு பேருக்கு வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் இந்த விருதை பெறும் முதல் இலங்கையர் முத்தையா முரளிதரன் என்பது விசேட அம்சமாகும்.

 

லண்டனில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் இடைவேளையின் போது இந்ந விருது முரளிக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவை வீழ்த்தி வெற்றிக்களிப்பில் உள்ள இலங்கையர்களுக்கு ஐ.சி.சி. அதியுச்ச கௌரவம் இலங்கை வீரருக்கு கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே.