விசா காலா­வ­தி­யா­கிய நிலையில் சட்­ட­வி­ரோ­த­மாக எல்ல பகு­தியில் மறைந்து வாழ்ந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எல்ல பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

குறித்த நபரை பொலிஸார் பண்­டா­ர­வளை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி டபிள்யூ. பி.குண­சே­கர முன்­னி­லையில் நேற்­ற­முன்­ தினம் ஆஜர்­செய்­த­போது, தன்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொண்­ட­தனால் நீதி­பதி ஐம்­ப­தா­யிரம் ரூபா அப­ ரா­தமும் ஒரு வருட கால சிறைத்­தண்­ட­னை­யையும் விதித்தார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வெவன்டின் ரொமா­சொஸ்கி என்ற 28 வயது நிரம்பிய நபருக்கே, மேற்படி தண்டனை வழங்கப் பட்டுள்ளது.