(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கியுள்ள பணத்தில் ஆயிரம் வீடுகளைக்கூட அமைக்க முடியாது. அதனால் அரசாங்கம் அந்த மக்களுக்கு வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நினைத்தால் 7பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜித் சன்ஜே பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரச ஊழியர்களுக்கு உணரக்கூடிய வகையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றே ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.ஆனால் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு எவ்வளவு என்பதை அரச தரப்பினருக்கே தெளிவில்லாமல் இருக்கிறது.
எங்களுக்கும் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. ஆனால் எனக்கு விளங்கியதன் பிரகாரம் 5070 ரூபா அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் தெரிவித்திருக்கும் 15ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ள 2027ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
அத்துடன் வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும்தொகை 2200 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கம் தெரிவித்திருக்கும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தால், துண்டு விழும்தொகையை பெற்றுக்கொள்ள வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வரி அதிகரிப்பு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் வேறு திட்டங்கள் எதுவும் இல்லை.
அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக வழங்க பரிந்துரைப்பதாக ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக அதிகரித்து பெற்றுக்கொடுப்பதாகவே இவர்களின் கொள்கை பிரகடனத்தி்ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்த 1700 ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு அதனை செய்ய முடியவில்லை. அவரின் இறுதி கால கட்டத்திலேயே கம்பனிகளுடன் கலந்துரையாடி 1350 ரூாப சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
மேலும் மலையக மக்களின் வீட்டு திட்டத்திற்கு 4ஆயிரம் மில்லியன் ரூபாவே அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது. அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் இந்த நிதியில் இந்த வருத்தில் ஆயிரம் வீடுகளைக்கூட நிர்மாணித்துக்கொடுக்க முடியாது.
அதனால் மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றால், எமது அரசாங்கம் அந்த மக்களுக்கு 7பேர்ச் காணி கொடுத்ததுபோல் அரசாங்கம் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு தேவையான வீட்டை நிர்மாணித்துக்கொள்வார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM