தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பெற்றோர்கள்

22 Feb, 2025 | 05:57 PM
image

(அட்டன் கிளை)

அட்டன் கப்ரியல் மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுக்கு  தமது பிள்ளைகளை தரம் 6 இற்கு உள்வாங்குவதில் கல்லூரி நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.  

இது தொடர்பில்  வலயக்கல்வி பணிமனையின்  உத்தரவுகளையும் மேற்படி கல்லூரி நிர்வாகம் அசட்டை  செய்வதாகவும்  காரணமின்றி தமது பிள்ளைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும்  பிள்ளைகளை நேர்காணலுக்கு அழைக்காமல் எந்த காரணங்களும் கூறப்படாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு   பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.  

கல்லூரி அதிபரின் கையொப்பம் இல்லாது  இலட்சிணை மாத்திரம் இடப்பட்டு தமக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையடுத்து பல பெற்றோர்கள் அட்டன் வலயக்கல்வி பணிமனைக்குச் சென்று பணிப்பாளரிடம் இது குறித்து முறைப்பாடு செய்ததையடுத்து அவர் அதிபரிடம் இது குறித்து விளக்கமளித்து சுற்றுநிருபங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விதிகளின் படி மாணவிகளை உள்வாங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் நிராகரிக்கப்படுவதாக கடிதங்கள் அனுப்புவது முறையல்ல என்றும் பாடசாலை அதிபரின் கையொப்பங்கள் இல்லாது அனுப்பியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என உதவிக் கல்வி பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் வெள்ளிக்கிழமையன்று மீண்டும் பாடசாலைக்குச் சென்ற பெற்றோர்கள் மற்றும் மாணவிகளை ஒரு மணித்தியாலயத்துக்கு மேல் காக்க வைத்துள்ள கல்லூரி நிர்வாகம்,   பெற்றோரை அழைத்து, உங்களுக்கு கடிதம் அனுப்புகிறோம் எனக் கூறி திருப்பியனுப்பியுள்ளது.

அட்டன் கப்ரியல் கல்லூரியின்  தரம் ஒன்று தமிழ்ப்பிரிவுக்கும் தரம் ஆறுக்கும் மாணவிகளை உள்வாங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து பல வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டும் அது குறித்து கல்வி அதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோ அக்கறை கொள்வது கிடையாது என விசனம் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து...

2026-09-16 15:55:10
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவு...

2026-09-16 15:40:46
news-image

கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து...

2026-09-16 15:43:27
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57