உறக்க கோளாறுகளை கண்டறியும் நவீன பரிசோதனை

Published By: Digital Desk 2

22 Feb, 2025 | 05:42 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் நாளாந்தம் எட்டு மணி தியாலம் வரை உறங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையை கடைப்பிடிப்பதில்லை. எம்மில் பலரும் ஆறு மணி தியாலத்திற்கும் குறைவாகவே உறங்கி, தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு தற்போது அக்டிகிராபி மற்றும் பொலிசோம்னோகிராபி என நவீன பரிசோதனைகள் மூலம் தூக்கம் தொடர்பான கோளாறுகளை ஆய்வு செய்து, அதற்குரிய சிகிச்சையை பரிந்துரைக்கிறார்கள்.

எம்முடைய வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தூக்கத்திற்காக செலவிடுகிறோம். நாளாந்தம் மக்கள் மேற்கொள்ளும் இந்த செலவு  அவர்களுடைய ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்திற்கான முதலீடு என தெரிந்து கொள்வதில்லை. தூக்கத்தை குறைத்துக் கொள்வதால் உடல்நலம் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.  அத்துடன் நாளாந்தம் ஆறரை மணி தியாலம் வரை ஆழ்நிலை உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள் ஏனெனில் ஆழ்நிலை உறக்கத்தின் போது எம்முடைய நரம்பு மண்டலம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் அன்றைய திகதியில் சேரும் கழிவுகளை நீக்கி, தங்களை புதுப்பித்துக் கொள்வதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

அதே தருணத்தில் கண் அசைவு மற்றும் கண் சார்ந்த செயல்பாட்டிற்கு உறக்கம் இன்றியமையாதது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். உங்களுடைய உறக்கத்தின் போது மூளைப் பகுதியிலிருந்து குருதிக்கு செல்லும் ஓக்சிஜனின் அளவு, இதயத்துடிப்பு, சுவாசம், கண், கால் அசைவுகள் ஆகியவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக வைத்திய நிபுணர்கள் தற்போது அக்டிகிராபி அல்லது பொலிசோம்னோகிராபி எனும் உறக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கிறார்கள்.

இத்தகைய ஆய்வின் மூலம் நீங்கள் உங்களுடைய உடல் கோரும் உறக்கத்திற்கும் , நாளாந்தம் நீங்கள் மேற்கொள்ளும் உறக்கத்திற்கும் இடையேயான வேறுபாட்டை கண்டறிய படுகிறது. தூக்க கோளாறுகளால் உங்களுடைய உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் குறிப்பாக இதயத்துடிப்பு ,கண் அசைவு, ரத்த நாளங்களில் ஓக்சிஜனுடன் கலந்த குருதி ஓட்டம் ஆகியவற்றை பற்றி துல்லியமாக ஆராய்ந்து அதற்கேற்ற தீர்வினை வைத்தியர்கள் மேற்கொள்கிறார்கள்.

வைத்தியர் ராமகிருஷ்ணன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15