bestweb

சசிகுமார் நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

22 Feb, 2025 | 05:13 PM
image

நடிகர் சசிகுமார் நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஈழ ஏதிலிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன்.படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'கண் மொழியால் பேசடி' எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் சசிக்குமார் - சிம்ரனின் திரை தோற்றமும், இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டனின் குரலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் 'சீதா பயணம்...

2025-07-11 17:40:45
news-image

ஓஹோ எந்தன் பேபி - திரைப்பட...

2025-07-11 16:40:08
news-image

மாயக்கூத்து - திரைப்பட விமர்சனம்

2025-07-11 16:11:54
news-image

செப்டம்பரில் வெளியாகும் விஜய் அண்டனியின் '...

2025-07-11 16:12:18
news-image

இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் - அன்னா...

2025-07-11 16:12:32
news-image

சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை விவரிக்கும்...

2025-07-10 16:58:52
news-image

கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' படத்தின் டைட்டில்...

2025-07-10 16:58:36
news-image

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க...

2025-07-10 16:53:40
news-image

''நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டில்...

2025-07-09 18:34:55
news-image

சிவகார்த்திகேயனின் 'மதராசி'யுடன் மோதும் வெற்றி மாறனின்...

2025-07-09 18:19:56
news-image

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும்...

2025-07-09 18:19:30
news-image

கிறித்தவ மத கன்னியாஸ்திரிகளின் வாழ்வியலை விவரிக்கும்...

2025-07-09 18:21:37