bestweb

நீண்ட கால கிரிக்கெட் வைரிகள் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இன்று

22 Feb, 2025 | 02:09 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆகியவற்றின் ஸ்தாபக நாடுகளும் நீண்டகால கிரிக்கெட் வைரிகளுமான இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி லாகூர், கடாபி விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

பி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானை தென் ஆபிரிக்கா இலகுவாக வெற்றி கொண்டதால் இதே குழுவில் இடம்பெறும் இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இன்றைய போட்டி தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி கிட்டத்தட்ட நொக் அவுட் போட்டிக்கு ஒப்பானதாக அமைவதாலும் ஒவ்வொரு குழுவிலிருந்து இரண்டு அணிகளே அரை இறுதிகளுக்கு முன்னேறுவதாலும் இன்றைய போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் முக்கியமானதாக அமைகிறது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி, அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும். தோல்வி அடையும் அணி அடுத்த இரண்டு போட்டிகளையும் கடும் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும்.

நடப்பு உலக சம்பியனும் இரண்டு தடவைகள் (2006, 2009) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தில் சம்பியனானதுமான அவுஸ்திரேலியாவின் அண்மைக்கால ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் திருப்தி தரக்கூடியதாக இல்லை, அவுஸ்திரேலியா கடைசியாக விளையாடிய இரண்டு தொடர்களில் பாகிஸ்தானிடமும் இலங்கையிடமும் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்தின் நிலையும் அதேபோன்றுதான் இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக இம் மாதம் நடைபெற்ற சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 0 - 3 என முழுமையாகத் தோல்வி அடைந்தது.

எவ்வாறாயினும் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் கடைசியாக கடந்த செப்டெம்பர் மாதம் விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட மிகவும் இறுக்கமான இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா 3 - 2 என வெற்றிபெற்றிருந்தது.

இந்தப் போட்டிகளின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும் இரண்டு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இடம்பெறுவதால் இன்றைய போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

குழாம்கள்

அவுஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அபொட், அலெக்ஸ் கேரி, பென் த்வாஷுய்ஸ், நேதன் எலிஸ், ஜேக் ப்ரேஸர்-மெக்கேர்க், ஆரொன் ஹார்டி, ட்ரவிஸ் ஹெட், ஜொஸ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மெத்யூ ஷோர்ட், அடம் ஸம்ப்பா. சுற்றுப்பயண பதில் வீரர்: கூப்பர் கொனலி.

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (அணித் தலைவர்), ஜொவ்ரா ஆச்சர், கஸ் அட்கின்ஸன், டொம் பென்டன், ஹெரி ப்றூக், ப்றய்டன் கார்ஸ், பென் டக்கெட், ஜெமி ஓவர்ட்டன், ஜெமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ராஷித், ஜோ ரூட், சக்கிப் மஹ்மூத், பில் சோல்ட், மார்க் வூட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில்...

2025-07-16 23:05:12
news-image

தீர்மானம் மிக்க ரி20 கிரிக்கெட் போட்டியில்...

2025-07-16 20:56:13
news-image

பங்களாதேஷுடனான தீர்மானம் மிக்க போட்டியில் முதலில்...

2025-07-16 19:21:08
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-07-16 18:53:36
news-image

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க ஆடவர்...

2025-07-16 17:07:14
news-image

பாடசாலைகளுக்கு இடையிலான வட மாகாண கராத்தே...

2025-07-16 15:51:03
news-image

ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர்...

2025-07-15 20:22:41
news-image

டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு...

2025-07-15 17:34:16
news-image

இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட்...

2025-07-14 22:36:02
news-image

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர்...

2025-07-14 12:46:54
news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55