தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள் உடனுறை கோணேசப்பெருமான் திருக்கோயில் மஹா சிவராத்திரி பெருவிழாவும் நகர்வலமும் ..!

Published By: Digital Desk 7

22 Feb, 2025 | 11:53 AM
image

திருகோணமலை மண்ணிற்கே உரித்தான கோணேசப் பெருமான் நகர் வலம் , மஹா சிவராத்திரி  பெருவிழா புதன்கிழமை (26) ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்று வியாழக்கிழமை (27) நகர் வலம் ஆரம்பமாகும். 

பெருமான் வலம் வரும் வீதிகளைச் சுத்திகரித்து, நந்திக்கொடிகள் ஏற்றி மகர தோரணங்களால் அலங்கரித்து தம் இல்லங்கள் தோறும் பூரண கும்பங்கள் வைத்து சிவநெறியும் சைவப்பண்பாடும் சிறக்க வழிபாடு செய்து பெருமானது பேரருளைப் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர்  வேண்டுகின்றனர்.   

நகர்வல விஞ்ஞாபனம் 27.02.2025 – 03.03.2025 வரை இடம் பெறும்.

முதலாம் நாள் (27.02.2025 – வியாழக்கிழமை)

கோணேசப்பெருமான் தனது ஆலயத்திலிருந்து பி.ப 5.30 மணிக்குப் புறப்பட்டு கோட்டைவாசல் வழியாக வலதுபக்கம் மணிக்கூண்டு கோபுரம், ஏகாம்பரம் வீதி, கோணேசப்பெருமானும் மாதுமைப்பிராட்டியாரும் தோன்றி அருளிய வீரநகர் புனித கிணற்றடி ஆலயம், வலது பக்கம் ஏகாம்பரம் வீதி அருள்மிகு கேணியடி சித்தி விநாயகர் ஆலயம், வலதுபக்கம் அருள்மிகு திருக்கடலூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம், அருள்மிகு உப்புவெளி தொடுவாய்ப் பிள்ளையார் ஆலயம், 3ம் கட்டைச்சந்தி வலது பக்கம் அருள்மிகு சோலையடி வைரவர் ஆலயம், அருள்மிகு ஆலையடி ஞான வைரவர் ஆலயம்,  தி/ஸ்ரீ மாதுமையம்பாள் வித்தியாலயம், இடதுபக்கம் புளியம்குளம் பிரதான வீதி, புளியம்குளம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், அருள்மிகு முனியப்பர் ஆலயம், பாடசாலை வீதி, செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம், அருள்மிகு ஸ்ரீ ஆதிபத்திரகாளியம்பாள் ஆலயம், பாடசாலை வீதிச்சந்தி இடதுபக்கம் கதிர்காமத்தம்பி வீதி வழியாக  3ம் கட்டை வரை சென்று அதே வழியால் திரும்பி வலதுபக்கம் அருள்மிகு ஆலடி விக்னேஸ்வரர் ஆலயம், வலதுபக்கம் கதிர்காமத்தம்பி வீதி, அன்புவழிபுரம் அருள்மிகு ஞானவைரவர் ஆலயம், அன்புவழிபுரம் நாற்சந்தி, அன்புவழிபுரம் வீதி ஊடாக கண்டி வீதி, வலதுபக்கம் காந்திநகர் பிரதான வீதி ஊடாக அருள்மிகு காந்திநகர் முத்துமாரியம்மன் ஆலயம் இடதுபக்கம் அருள்மிகு தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தினை அடைந்து 28.02.2025ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.5.00 மணிவரை விசேட அபிசேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

இரண்டாம் நாள் (28.02.2025 – வெள்ளிக்கிழமை) 

கோணேசப்பெருமான் அருள்மிகு தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பி.ப. 5.30 மணிக்குப் புறப்பட்டு இடது பக்கம் விபுலானந்த அடிகளார் வீதி ஊடாக கன்னியா வீதி புளியடிச்சந்தி இடதுபக்கம் அனுராதபுரச் சந்தியை அடைந்து வலதுபக்கம் கண்டி வீதி விபுலானந்தா கல்லூரி, இடது பக்கம் தியேட்டர் வீதி வலதுபக்கம் பாலையூற்று அருள்மிகு பாலமுருகன் ஆலயம், விளையாட்டு மைதான வீதி, 5சந்தி அருள்மிகு பாலவிநாயகர் ஆலய வீதி, இடதுபக்கம் 2வது ஒழுங்கை அருள்மிகு ஞானவைரவர் ஆலய வீதி, வலதுபக்கம் கண்டி வீதி, வலதுபக்கம் அபயபுரம் சுற்றுவட்டம் வலதுபக்கம் லிங்கநகர் 2ம் ஒழுங்கை,11ம் ஒழுங்கை சந்தி,  26வது ஒழுங்கை  வரை சென்று திரும்பி அருள்மிகு பாலமுருகன் ஆலயம், வலது பக்கம் 11ம் ஒழுங்கை வலது பக்கம் முதியோர் இல்ல வீதி, ஸ்ரீ இராகவேந்திரா ஆலயம் வரை சென்று திரும்பி அருள்மிகு கோணலிங்கப் பிள்ளையார் ஆலயம், வலதுபக்கம் கண்டி வீதி, இடதுபக்கம் இராஜவரோதயம் சதுக்கம், இடதுபக்கம் 1ம் ஒழுங்கை வழியாக அருள்மிகு வரசக்தி விநாயகர் ஆலயம் வரை சென்று திரும்பி அருள்மிகு ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலயம் வரை சென்று திரும்பி விநாயகபுரம் இடதுபக்க ஒழுங்கை, இடதுபக்கம் கண்டி வீதி, தன்வந்திரி மருத்துவமனை கடந்து பொலிஸ்நிலைய சந்தி, உவர்மலை கண்ணகிபுரம் 3ம் ஒழுங்கையூடாக உவர்மலை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தை அடைந்து 01.03.2025ம் திகதி சனிக்கிழமை பி.ப 5.00 மணிவரை விசேட அபிசேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

மூன்றாம் நாள் (01.03.2025 – சனிக்கிழமை) 

கோணேசப்பெருமான் பி.ப 5.30.மணிக்கு அருள்மிகு உவர்மலை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு இடதுபக்கம் மத்திய வீதி வலதுபக்கம் உட்துறைமுக வீதி இந்து இளைஞர் பேரவை, வலதுபக்கம் ஆளுநர் செயலகம் வீதி இலங்கை துறைமுக அதிகார சபையின் சுற்றுலா விடுதி வரை  சென்று அதே வழியில் திரும்பி உட்துறைமுக வீதி  அருள்மிகு வழிவிடு விநாயகர் ஆலயம் இடதுபக்கம் உவர்மலை மத்திய வீதி ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனை மத்திய வீதி 3ம் ஒழுங்கை வழியாக அருள்மிகு விநாயகப் பெருமான் ஆலயம் இடதுபக்கம் ஸ்பெல்வின் வீதி அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம் வலதுபக்கம் மக்கெஸ்சர் வீதி தேன்தமிழ் வீதி இடதுபக்கம் அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயம்  சென்று திரும்பி 4ம் ஒழுங்கை ஊடாக அருள்மிகு ஞானவைரவர் ஆலயம் வழியாக பொலிஸ் நிலையம், அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் ஆலயம், திரும்பி மடத்தடி வரை சென்று திரும்பி இடது பக்கம் விகாரை வீதி, உட்துறைமுக வீதி அருள்மிகு வழிவிடு விநாயகர் ஆலயம், இடதுபக்கம் சிவபுரி ஊடாக திருஞான சம்பந்தர் வீதி, வலதுபக்கம் அருள்மிகு விசுவநாதசுவாமி (சிவன்) ஆலயத்தை அடைந்து 02.03.2025ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணிவரை விசேட அபிசேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

நான்காம் நாள் (02.03.2025 – ஞாயிற்றுக்கிழமை)

கோணேசப்பெருமான் பி.ப. 5.30 மணிக்கு அருள்மிகு விசுவநாதசுவாமி (சிவன்) ஆலயத்திலிருந்து புறப்பட்டு சிவன் வீதி, இடது பக்கம் பிரதான வீதி  மடத்தடிச் சந்திவரை சென்று அருள்மிகு கிருஸ்ணபகவான் ஆலயம், அருள்மிகு சனீஸ்வரர் ஆலயம் கொத்தி ஒழுங்கை சந்தி வரை சென்று இடது பக்கம் மத்திய வீதி மணிக்கூண்டு கோபுரம் வலது பக்கம் டொக்யாட் வீதி, வலதுபக்கம் பிரதான வீதி அருள்மிகு ஞானவைரவர் சுவாமி திருக்கோயில் கடற்காட்சி வீதிச்சந்தி வரை சென்று திரும்பி அதே வழியில் வலதுபக்கம் மாணிக்கவாசகர் வீதி அருள்மிகு கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலயம், அருள்மிகு பேச்சியம்மன் ஆலயம், இடதுபக்கம் அருள்மிகு தெய்வானைப் பிள்ளையார் ஆலயம், இடதுபக்கம் திருமால்வீதி ஊடாக அபான்ஸ் சந்தியை அடைந்து இடதுபக்கம் கடற்காட்சி வீதி, இடது பக்கம் தில்லைநகர் ஊடாக வலது பக்கம் உட்துறைமுக வீதி, கடற்காட்சி வீதி, இடதுபக்கம் பிரதான வீதி, அருள்மிகு சமாது தங்கவிநாயகர் ஆலயம், இடதுபக்கம் அருள்மிகு மடத்தடி முத்துமாரியம்மன் ஆலயம், அருள்மிகு விசுவநாதசுவாமி (சிவன்) ஆலயம், அருள்மிகு கற்பகப்பிள்ளையார் ஆலயம், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம், இடதுபக்கம் இராஜவரோதயம் வீதி வலதுபக்கம் வித்தியாலயம் வீதி ஊடாக அருள்மிகு பத்திரகாளிஅம்பாள் ஆலயத்தை வந்தடைந்து 03.03.2025ம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிவரை விசேட அபிசேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

ஐந்தாம் நாள் (03.03.2025 – திங்கட் கிழமை)

கோணேசப்பெருமான் பி.ப 5.30 மணிக்கு அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, வலதுபக்கம் கல்லூரி வீதி நெஸ் கபே வரை சென்று திரும்பி புதிய சோனக தெரு வழியாக அருள்மிகு இரட்ணசிங்கப்பிள்ளையார் ஆலயம் இடதுபக்கம் கிறீன் வீதி நெல்சன் திரையரங்கு வன்னியார் வீதி வலது பக்கம் அருணகிரி வீதி இடதுபக்கம் கிறீன் வீதி ரெலிகொம் வீதி இடதுபக்கம் உட்துறைமுக வீதி, மயான வீதிச் சந்திவரை சென்று திரும்பி அரசினர் விடுதி வீதியூடாக அருள்மிகு வெள்ளை வில்வபத்திர ஆதி கோணேஸ்வரர் ஆலயம் வலதுபக்கம் மின்சார நிலைய வீதி வலதுபக்கம் தபால் நிலைய வீதி துறைமுக பொலிஸ் சுற்றுவட்டம் வரை சென்று திரும்பி வலது பக்கம் நீதிமன்ற வீதி, இடதுபக்கம் சுங்க வீதி இடதுபக்கம் சினேக் ஒழுங்கை வழியாக அருணகிரி வீதி வலதுபக்கம்  சுங்க வீதி இடதுபக்கம் பாரதி வீதி இடதுபக்கம் பேராலய வீதி வலதுபக்கம் புனித மரியாள் வீதி வலது பக்கம் டொக்யாட் வீதி வலதுபக்கம் பேக்கரி வீதி இடதுபக்கம் பேராலய வீதி இடதுபக்கம் பாரதி வீதி ஜோர்ஜ் வீதி வலதுபக்கம் நீதிமன்ற வீதி, வலது பக்கம் பற்றிமா வீதி (பாரதி வீதி சந்தி வரை சென்று) இடதுபக்கம் சுங்க வீதி, இடது பக்கம் கந்தசுவாமி கோவில் வீதி அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயம்,கந்தசாமி கோவில் வீதி இடது பக்கம் டொக்கியாட் வீதி வலது பக்கம் நீதிமன்ற வீதி மனையாவெளி அருள்மிகு வல்லபசக்தி அம்பாள் ஆலயம் அதே வழியில் திரும்பி நீதிமன்ற வீதி வலது பக்கம் அரச அதிபர் விடுதி வீதி வலது பக்கம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அதே வழியில் திரும்பி வலது பக்கம் சுகாதார திணைக்கள வீதி வலது பக்கம் நீதிமன்ற வீதி அருள்மிகு கோட்டடி ஸ்ரீ ஆதிமுனீஸ்வரர் ஆலயம் டொக்கியாட் வீதி வலது பக்கம் வைத்தியசாலை வீதி அருள்மிகு வைத்தியசாலை சித்திவிநாயகர் ஆலயம் இடது பக்கம் டைக் வீதி டொக்கியாட் வீதி நகராண்மைக்கழக வாயிலூடாக அருள்மிகு பிள்ளையார் ஆலயம் பிரட்றிக் கோட்டை வீதி, திருக்கோணேஸ்வரம் சிவபூமி யாத்திரிகர் மடம் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை பணிமனை ஊடாக எம்பெருமான் தமது இருப்பிடத்தை சென்றடைவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வயலின் மறுசீரமைப்பில் ஒரு கலங்கரை விளக்கமாக ...

2025-04-22 13:58:25
news-image

புதிய அலை கலை வட்ட இளைஞர்...

2025-04-19 10:02:50
news-image

பங்குனி உத்தர நாயகி போற்றி....!

2025-04-04 16:54:50
news-image

நுவரெலியா காயத்ரி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள 108...

2025-04-10 16:32:08
news-image

கம்பளை முத்துமாரியம்மன் தேவஸ்தான பங்குனித் திங்கள்...

2025-04-06 12:33:39
news-image

பங்குனி உத்தரத்திருநாளின் தெய்வீக சிறப்புகள்...!

2025-04-04 10:18:30
news-image

ஹப்புகஸ்தென்ன அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-29 14:32:37
news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08