மின் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்க முடியும் - உதய கம்மன்பில

Published By: Vishnu

21 Feb, 2025 | 06:25 PM
image

(எம்.மனோசித்ரா)

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். வலுசக்தி மாபியாக்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்கள் எடுக்கப்படும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வலுசக்தி மாபியாக்களை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (21) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த மேலும் குறிப்பிடுகையில்,

நாம் அமைச்சுப் பதவிகளை வகித்த போது, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்பட்டால் அதற்கெதிராக அமைச்சரவையிலும் குரலெழுப்பியிருக்கின்றோம். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. திரவ எரிவாயு விலை மனு கோரல் தொடர்பில் இறுதியில் நாமே எமது அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம். இதனால் நாம் அமைச்சுப்பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டோம்.

எரிபொருள் மாபியாக்களே இலங்கையில் மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் ஆட்சி கவிழ்ப்பில் பெரும் பங்கினை வகிக்கின்றன. எவ்வாறிருப்பினும் எமது நாட்டிலுள்ள சூழலியல் நிபுணர்களுக்கு இவர்களை எதிர்ப்பதற்குள்ள தைரியம் பாராட்டுக்குரியது. வர்த்தகர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.

வலுசக்தி துறை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளை மீட்டிப்பார்த்தால் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். மின்சார திருத்த சட்டத்தில் முன்னர் காணப்பட்ட 'ஆகக்குறைந்த கட்டணம்' என்ற சொல் 'நியாயமான கட்டணம்' என மாற்றப்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இதுவும் மாபியாக்களின் செயற்பாடே.

சூரிய மின்னுற்பத்தி கட்டமைப்பை ஒவ்வொரு பிரஜைகளும் சுயாதீனமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் இலங்கை மின்சாரசபையின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மின் துண்டிப்பு தொடர்பில் மின்சாரசபையால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் யாரையும் பாதிக்காது. எனவே மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08