(ஆர்.யசி)

இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய எம்மையும் எமது இராணுவ வீரர்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கின்றனர். சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு இலங்கைக்கு கிடைக்குமாயின் அது எமக்குத்தான் கிடைக்கும் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக தெரிவித்தார். 

இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து  ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அவர் வரவழைக்கப்பட்டிருந்தார். 

இதன்போதே அவர் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.