அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகளிலிருந்து வெளியேறி உண்மையான உலகில் பயணிப்பதற்கு தயாராக வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

22 Feb, 2025 | 11:22 AM
image

(எம்.மனோசித்ரா)

ஜனநாயகம் பற்றி கடுமையாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்டவர்களின் ஆட்சியில் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகளிலிருந்து வெளியேறி உண்மையான உலகில் பயணிப்பதற்கு நாம் தயாராக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (21) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய புதிய இளைஞர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இளம் அரசியல் பயணத்தில் இளைஞர்கள் எம்முடன் இணைய முடியும். இன்று பல அரசியல் கட்சிகள் இளம் தலைமுறையினருக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஜனநாயகம் பற்றி கடுமையாக தேர்தல் மேடைகளில் பிரசாரங்களை மேற்கொண்டவர்களின் ஆட்சியில் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. 

எனவே இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகளிலிருந்து வெளியேறி உண்மையான உலகில் பயணிப்பதற்கு நாம் தயாராக வேண்டும்.

நாம் என்றும் யதார்த்தத்துடன் அரசியல் செய்பவர்கள். ஒருபோதும் மக்களிடம் பொய் கூற மாட்டோம். டிஜிட்டல் மயப்படுத்தல் வேலைத்திட்டங்கள் பலவற்றை நாம் ஆரம்பித்திருந்தோம். அவற்றை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமானால் அதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57