சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்­டத்தில் இலங்கை – இந்­திய அணிகள் இன்று மோது­கின்­றன. 

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கவுள்ளது.

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரு­கி­றது. இந்­தப்­போட்­டியில் 8 நாடுகள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்­றன. 

அவை இரண்டு பிரி­வுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் இலங்கை அணி ‘பி’ பிரிவில் உள்­ளது. தென்­னா­பி­ரிக்காஇ பாகிஸ்தான்இ இந்­தியா ஆகிய நாடு­களும் அந்த பிரிவில் உள்­ளன.

இந்­நி­லையில் இலங்கை அணி இந்­தி­யாவை இன்று எதிர்­கொள்­கி­றது. தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி தோல்­வியை சந்­தித்­தி­ருந்­தது. 

அதே­வேளை இந்­திய அணி தனது தொடக்க ஆட்­டத்தில் பாகிஸ்­தானை 124 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி அபார வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.  

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் விளையாடும் இரண்­டா­வது போட்­டி­யாக இன்று நடை­பெ­ற­வுள்ள போட்டி அமை­ய­வுள்­ளது. 

இப் போட்டியானது இரு அணிக்கும் மிக முக்கிய போட்டியாக அமைந்திருந்தாலும் இறுதியில் அதிக போட்டிகளில் காலநிலையே வெற்றியை தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.