கிளி­நொச்­சியில் சர்­வ­தேச தரம் மிக்க மைதா­னத்­தினை நிர்­மாணிப்­ப­தற்­காக கேள்­விப்­பத்­திரம் மீளவும் கோரப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜயசேகர வடக்கு, தெற்கு என்ற பேத­மின்றி விளை­யாட்­டுத்­து­றையை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை விளை­யாட்­டுக்கள் சட்­டத்தின் கீழான ஒழுங்கு விதி­களை அங்­கீ­க­ரித்தல் தொடர்­பான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன், கிளி­நொச்­சியில் சர்­வ­தேச தரம் வாய்ந்த மைதானம் அமைக்­கப்­படும் என கடந்த நான்கு வரு­டங்­க­ளாக கூறப்­பட்டு வரு­கின்ற போதும் நிர்­மா­ணப்­ப­ணிகள் முன்­னேற்­ற­க­ர­மாக இடம்­பெ­ற­வில்லையே என்றும் ஆனால் இந்த மைதா­னத்­திற்கு சமாந்­தர­மாக குரு­நா­கலில் நிர்­மா­ணப்­ப­ணிகள் ஆரம்­பிக்­கப்­பட்ட மைதா­ன­மா­னது தற்­போது வீரர்­களின் பாவ­னைக்­காக விடப்­பட்­டுள்­ளது. 

வடக்­கிற்கு மட்டும் ஏன் இந்த பார­பட்சம் காட்­டப்­ப­டு­கின்­றது என்றார்.

இச்­ச­ம­யத்தில் குறுக்­கீடு செய்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, உங்­க­ளது பிரச்­சினை எனக்கு புரி­கின்­றது. உங்­களை விடவும் கிளி­நொச்­சியில் மைதானம் எனக்கே அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

உண்­மையில் இந்த மைதா­னத்­தினை நிர்­மாணிப்­ப­தற்­கான கேள்­விப்­பத்­திரம் கோரப்­பட்டு இலங்கை பொறி­யியல் நிறு­வ­னத்­திடம் பொறுப்பு வழங்­கப்­பட்­டது. எனினும் அந்த நிறு­வ­னத்­தி­டம் நிதி­வளம் இல்லாததால் நிர்­மா­ணப்­ப­ணியை மேற்­கொள்ள முடி­யா­துள்­ளது. 

இந்த நிர்­மா­ணத்­தினை முன்­னெ­டுத்­துச்­செல்­வ­தற்­காக மீளவும் கேள்­விப்­பத்­தி­ரத்­தினை கோரு­வ­தென தீர்­மா­னித்­துள்ளோம். எனினும் கேள்­விப்­பத்­தி­ரத்­தினை கோரு­வ­தற்­கான அதி­காரம் எனக்கில்லை. ஆகவே அதற்குரிய தரப்புக்கள் விரைவாக நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கின்றேன் என்றார்.

கிளிநொச்சி, விளையாட்டு மைதானம், சர்வதேச தரம், நிர்மாணம், விளையாட்டுத்துறை, முக்கியம், பொறியியல்நிறுவனம்