''பதக்கம் ஏலத்திற்கு வந்தால் விளையாட்டுத்துறை அமைச்சே வாங்கும் : பதக்க விற்பனையை தடுக்க புதிய சட்டம் வரும் ''

Published By: Priyatharshan

08 Jun, 2017 | 02:29 PM
image

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­று­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்குரி­ய­வை­யாகும். அதற்­கேற்­ற ­வ­கையில் புதிய சட்டம் கொண்டு வரப்­பட வேண்டும். அப்­போது பதக்­கங்­களை விற்­பனை செய்­வதை தடுக்க முடியும் என விளை­யாட்டுத்துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

அர­சாங்கம் என்ற வகையில் ஒலிம்பிக் வீராங்­கனை சுசந்­தி­கா­விற்கு தேவை­யான அனைத்­தையும் செய்­துள்­ளது. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம்பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்டுத்துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும் என அவர் குறிப்­பிட்டார். 

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்களை அறி­விக்கும் ஊடக சந்­திப்பில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

அர­சாங்கம் என்ற வகையில் சுசந்­தி­கா­வுக்கு செய்ய வேண்­டிய கட­மைகள் அனைத்­தையும் செய்­துள்­ளது. அவரை சர்­வ­தேச போட்­டி­க­ளுக்கு தயார்­ப­டுத்­து­வது முதல் இன்று வரை பல கோடி­ ரூபாவை செல­விட்­டுள்­ளது. 

சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம் பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்டுத் துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும். 

ஆனால் இவ்­வா­றான செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­காக புதிய சட்டம் ஒன்றின் தேவை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. 

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு 

வெற்­றி­பெ­று­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்கு உரித்தாகும்  வகையில் அந்த சட்டம் அமையப்பெற வேண்டும். அதனூடாக பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35