உழவு இயந்திரத்தின் சுழல் கலப்பையில் சிக்கி இராணுவ சிப்பாய் பலி

Published By: Vishnu

20 Feb, 2025 | 07:00 PM
image

திம்புள்ள பத்தனை இராவணாகொட பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் சுழல் கலப்பையில் மோதி இராணுவத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் 20ஆம் திகதி வியாழக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஜயபாகு கந்த, மஹாவலிகம ஹவன்வெவ பிரதேசத்தில் வசித்து வந்த கொட்டகேபிட்டிய பகுதியை சேர்ந்த தசந்த சந்திக ஹேரத் (32) என்ற திருமணமான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் இராணுவ சேவையிலிருந்து விடுமுறையில் வீடு திரும்பியதும், உழவு இயந்திரத்தில் தனது வயலை தயார் செய்வதற்காக உழவு இயந்திரத்தை ஸ்டார்ட் செய்யதபோது எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் சுழலும்  கலப்பையில் சுற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் சுழலும் கலப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில், ஹட்டன் நீதவான் வந்து சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25