விஜய்க்காக மீண்டும் பிரபுதேவா

08 Jun, 2017 | 01:37 PM
image

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்ட பிரபுதேவா தனது நண்பர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கியிருக்கிறார்.

‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்துள்ளார். 

இந்நிலையில், சாய் பல்லவி தற்போது நானி ஜோடியாக `பிடா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் `கரு' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த போஸ்டரை இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா வெளியிடுகிறார். "தேவி' படத்தின் மூலம் பிரபுதேவா - ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர். 

அதன் காரணமாக ஏ.எல்.விஜய் இயக்கிய "வனமகன்' படத்தை பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஜெயம் ரவி - சாயிஷா நடிப்பில் உருவாகி உள்ள வனமகன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற 23ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்