மன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்!  

20 Feb, 2025 | 05:36 PM
image

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு, ராமேஸ்வரம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்டபோது மன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வடமத்திய மாகாண கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதான நான்கு இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

அதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர், அவர்கள் நால்வரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அந்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41