தமனி எனும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பாதிப்பை சீராக்குவதற்கான நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

20 Feb, 2025 | 04:56 PM
image

எம்முடைய இதயத்தில் இருந்து தமனி எனும் ரத்த நாளம் வழியாக உடல் முழுவதும் ஓக்சிஜன் நிறைந்த குருதி செல்கிறது. இதில் ஏதேனும் கொழுப்பு படிவம் ஏற்பட்டு அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமனி அடைப்பு பாதிப்பு என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய இதயப் பகுதியில் இருந்து உடல் முழுவதும் சுத்தமான ரத்தம் தமனி எனும் பிரத்யேக ரத்த நாளங்களின் வழியாக செல்கிறது. அதன் பிறகு மாசடைந்த குருதி சிரை எனும் பிரத்யேக ரத்த நாளங்கள் வழியாக மீண்டும் திரும்புகிறது. இந்தத் தருணத்தில் சுத்தமான ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி எனும் ரத்த நாளத்தில் கொழுப்பு படிவம் காரணமாக இரத்த நாள சுருக்க பாதிப்பு , அடைப்பு பாதிப்பு போன்றவை ஏற்படலாம். இதனால் அந்தப் பகுதியில் குருதியோட்டம் தடைபடுகிறது.  ஓக்ஸிஜடன் கூடிய ரத்தம் உடலுக்குள் செல்லாததால் அப்பகுதியில் உள்ள திசுக்கள் சேதமடைந்து இறந்து விடுகிறது. சிலருக்கு இத்தகைய பாதிப்பு உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும். இதனால் இதனை உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வேண்டும். இது இதயத்தில் மட்டும் அல்லாமல் கால் பகுதிகளிலும், மூட்டு பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.

வயது, பாலின வேறுபாடு இன்றி நான்காயிரத்தி ஐநூறு மக்களில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு எழுபது வயதிற்கு மேல் ஏற்படுவது அதிகம் என்றும் அண்மைய ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. ரத்த நாளங்களில் எங்கு அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ அந்த குறிப்பிட்ட இடத்தில் வலி , சிலருக்கு தாங்க முடியாத வலி, தோலில் நிற மாற்றம் , ஊசி குத்துவது போல் உணர்வு,  எரிச்சல், சிலருக்கு சமச்சீரற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இத்தகைய அறிகுறிகளை உடனடியாக அவதானம் கொண்டு சிகிச்சை பெறவில்லை என்றால் உடற்பருமன், நீரிழிவு ,சமச்சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பு , உயர் குருதி அழுத்த பாதிப்பு , மாரடைப்பு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து அவர்கள் உங்களுடைய தமனி மற்றும் சிரை ஆகிய ரத்த நாளங்களுக்கான பிரத்யேக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலமாக நிவாரணம் வழங்குவர். சிலருக்கு மட்டும் சத்திர சிகிச்சை செய்து நிவாரணம் அளிப்பர்.

இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என்றும், புகையிலை பொருட்களின் பாவனை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவர். அதனுடன் உங்களுடைய உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும் என்றும், அதற்குரிய உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றை உறுதியாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவர்.

வைத்தியர் துர்கா தேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15