(நெவில் அன்தனி)
கராச்சி தேசிய விளையாட்டரங்கில் இன்று புதகன்கிழமை (19) நடைபெற்ற ஒன்பதாவது சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியனும் வரவேற்பு நாடுமான பாகிஸ்தானை 60 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிகொண்டது.
வில் யங், டொம் லெதம் குவித்த அபார சதங்கள், கிலென் பிலிப்ஸ் பெற்ற அதிரடி அரைச் சதம் என்பன நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
பகல் இரவு போட்டியாக நடத்தப்பட்ட அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைக் குவித்தது.
நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 3 விக்கெட்கள் 73 ஓட்டங்களுக்கு சரிந்தன.
இந் நிலையில் வில் யங், டொம் லெதம் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். வில் யங் 113 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 107 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (37.2 ஓவர்களில் 191 - 4 விக்.)
40 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் அவ்வணி 260 ஓட்டங்களுக்கு மேல் பெறாது என கருதப்பட்டது.
ஆனால், டொம் லெதம், க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 74 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
கடைசி ஓவர்களில் மிகவும் ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய டொம் லெதம் 104 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 118 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
க்லென் பிலிப்ஸ் 39 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஒட்டங்களைக் குவித்தார்.
நியூஸிலாந்து கடைசி 10 ஓவர்களில் 113 ஓட்டங்களை விளாசியது.
பந்துவீச்சில் நசீம் ஷா 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 83 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
321 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நியூஸிலாந்தைப் போன்றே பாகிஸ்தானின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.
21 ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சல்மான் அகா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
சல்மான் அகா 28 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 42 ஓட்டங்களையும் பாபர் அஸாம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் தய்யப் தாஹிரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (153 - 6 விக்.)
மத்திய வரிசையில் குஷ்தில் ஷா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 49 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார். 14 ஓட்டங்களைப் பெற்ற ஷஹீன் ஷா அப்றிடியுடன் 7ஆவது விக்கெட்டில் குஷ்தில் ஷா 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
கடைநிலை வீரர்களான நசீம் ஷா (13), ஹரிஸ் ரவூப் (19) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் பாகிஸ்தான் சற்று கௌரவமான தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் வில் ஓ'ரூக் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: டொம் லெதம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM