கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - நாமல்

19 Feb, 2025 | 10:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை. சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள். இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். கடந்த  காலங்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர்  மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார ரீதியில்  முன்னேற்றமடைய வேண்டுமாயின் முதலில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.  ' தேசிய பாதுகாப்புக்கு இம்முறை குறைவான நிதியை ஒதுக்கியுள்ளோம். ஆகவே அனைவரும் சுதந்திரமாக வீதியில் செல்லாம்'  அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். நடைமுறையில் நிலைமை அவ்வாறான உள்ளது.

நேற்று இரவு மித்தெனிய பகுதியில் சிறுமி உட்பட ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்றத்துக்குள் படுகொலை. நீதிமன்ற விசாரணையின் போது  நீதிபதியின் முன்னிலையில் படுகொல, துப்பாக்கிச்சூடு, பாதாள குழுக்களாக இருக்கலாம். அவர்களின் ஒழுக்கம் பற்றி பேசவில்லை.நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு இதுவே பாரதூரம்.

பாதுகாப்பு பிரச்சினையில்லை அனைவரும் எங்கும் செல்லலாம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் மறுபுறம் பட்டப்பகலில் மனித படுகொலைகள் இடம்பெறுகிறது.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது.

 மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை.சட்டத்தரணியை போன்று வேடமிட்டு  கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள்.இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றார் யார். நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். ஆகவே கடந்த  காலங்களை பற்றி பேசிக் கொண்டிருக்காமல்  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29