(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்திற்கு இணங்க மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சுகாதாரத் துறையில் டாக்டர்கள் முதல் சுகாதார உதவியாளர்கள் வரை அவர்களின் சேவை பாராட்டப்பட்டு மதிக்கப்படுகிறது. அந்த வகையில் அவர்களுக்கு மேலதிக நேரமாக 120 மணித்தியாலங்களுக்கு மேல் பணி புரிய நேர்கிறது.
அதனை கருத்திற் கொண்டே டாக்டர்கள் முதல் அரசாங்க ஊழியர்கள் அனைவரினதும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்திற்கு இணங்க மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.
அந்த வகையில் அரசாங்க ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்தை விட ஏப்ரல் மாதம் அதிகரித்த சம்பளத்தை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சிறு சிறு குழுக்கள் குழப்பம் அடைந்திருந்தாலும் அதற்கு அகப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அந்த வகையில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM