சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்­டத்தில் இலங்கை – இந்­திய அணிகள் இன்று மோது­கின்­றன. 

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரு­கி­றது. இந்­தப்­போட்­டியில் 8 நாடுகள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்­றன. 

அவை இரண்டு பிரி­வுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் இலங்கை அணி ‘பி’ பிரிவில் உள்­ளது. தென்­னா­பி­ரிக்கா, பாகிஸ்தான், இந்­தியா ஆகிய நாடு­களும் அந்த பிரிவில் உள்­ளன.

இந்­நி­லையில் இலங்கை அணி இந்­தி­யாவை இன்று எதிர்­கொள்­கி­றது. தென்­னா­பி­ரிக்க அணி­யு­ட­னான முத­லா­வது போட்­டியில் இலங்கை அணி தோல்­வியை சந்­தித்­தி­ருந்­தது. 

அதே­வேளை இந்­திய அணி தனது தொடக்க ஆட்­டத்தில் பாகிஸ்­தானை 124 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி அபார வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.  

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் விளையாடும் இரண்­டா­வது போட்­டி­யாக இன்று நடை­பெ­ற­வுள்ள போட்டி அமை­ய­வுள்­ளது. 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான ஆட்­டத்தில் இந்­திய வீரர்கள் அபா­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். அதே அதி­ரடி இன்­றைய ஆட்­டத்­திலும் நீடிக்­குமா என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அணி தொடக்க ஆட்­டத்தில் தென்­னாபி­ரிக்­கா­விடம் 96 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோற்­றது. உண்­மையைச் சொன்னால் இலங்கை வீரர்­களின் ஆட்டம் மோச­மா­கத்தான் இருக்­கி­றது.

உடல் தகுதி இல்­லா­ததால் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் கடந்த போட்­டியில் ஆட­வில்லை. 

இந்­தி­யா­வுக்கு எதி­ரான இன்­றைய போட்­டியில் மெத்­தியூஸ் கள­மி­றங்­க­வுள்­ளார். ஆனால் அவர் இந்தப் போட்­டியில் துடுப்­பாட்ட வீர­ராக மட்­டுமே செயற்­ப­டுவார் என்றும் பந்­து­வீச மாட்டார் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான போட்­டியில் மெது­வாக பந்து வீசி­யதால் உபுல் தரங்க  2 போட்­டிகளில் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இன்­றைய போட்­டியில் தரங்க விளை­யா­ட மாட்டார் என்பது இலங்­கைக்கு பின்­ன­டைவே. 

இந்­தி­யா­வுடன் ஒப்­பி­டு­கையில் துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சில் இலங்கை பல­வீ­னத்­துடன் காணப்­ப­டு­கி­றது. லசித் மலிங்க இந்­தி­யா­வுக்கு அச்சுறுத் தலாக இருப்பார். சங்கக்கார கூறியது போல இலங்கை அணி கர்வத்துடன் இந்தப் போட்டியில் விளையாடி னால் இந்திய அணியை வீழ்த்தி விடலாம். பொறுத் திருந்து பார்ப்போம் இந்தப் போட்டியில் சாதிக்கப்போவது யார் என்று.