(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் எதனையும் அரசாங்கம் திருத்தம் செய்யவில்லை. பயமா அல்லது தெரியாதா அல்லது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்டளையா என்பது தெரியவில்லை. அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும், இந்த அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் மக்களுக்கானது என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில் இதனை மக்களை ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம் என்றே குறிப்பிட வேண்டும். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களிடம் உண்மையை குறிப்பிடுங்கள்.
அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு 345 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 5900 ரூபாவே கிடைக்கப்பெறும்.
அரச சேவையில் சுமார் 14 இலட்சம் உத்தியோகத்தர்கள் உள்ளார்கள். அவர்களில் 51 சதவீதமானோர் கீழ் நிலை உத்தியோகத்தர்களாவர். மறுபுறம் தனியார் துறையில் 60 இலட்சம் பேர் உள்ளார்கள். இவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி முன்னணி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 180 ரூபாவாகவும், தேங்காயின் விலை 100 ரூபாவாகவும் காணப்பட்டது. ஆனால், தற்போது அரிசியின் விலை 260 ரூபாவாகவும், தேங்காயின் விலை 240 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 பேர் உள்ள ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றின் தற்போதைய விலையேற்றத்துக்கு அமைய குறைந்தபட்சம் 6600 ரூபாவை செலவழிக்க வேண்டும்.
ஆகவே, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. அரிசி மற்றும் தேங்காய் மாபியாக்களை தோற்கடிப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து பரிந்துரைகளும் சிறந்தது என்று நாங்கள் குறிப்பிடவில்லை. நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய செய்யும் தேவை நாணய நிதியத்துக்கு கிடையாது. நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் முன்னேற்றமடைந்த நாடுகளும் உள்ளன, வீழ்ச்சியடைந்த நாடுகளும் உள்ளன. ஆகவே, நாணய நிதியத்தின் வழிகாட்டலுடன் எமக்கான பொருளாதார திட்டங்களை நாமே வகுத்துக்கொள்ள வேண்டும்.
நாணய நிதியத்துடன் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் ஏதும் திருத்தம் செய்யப்படவில்லை. பயமா அல்லது தெரியாதா அல்லது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்டளையா என்பது தெரியவில்லை. அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இருப்பினும் இந்த அரசாங்கமும் கடந்த காலங்களை போன்றே செயற்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM