கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இன்று புதன்கிழமை (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் உயிரிழந்துள்ளார்.
சட்டத்தரணி வேடத்தில் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிரதான சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய மொஹமட் அஸ்லம் செரீப்டீன் எனப்படும் முன்னாள் கொமாண்டோ படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே 5 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது குறித்த சந்தேக நபருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்புள்ளமை சி.சி.ரி.வி. காணொளியில் புலப்பட்டுள்ளது. அந்த பெண்ணை கைதுசெய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் பல பெயர்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இவர் பல ஆள் அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார். சட்டத்தரணியென தன்மை அடையாளப்படுத்த சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டையையும் வைத்திருந்துள்ளார்.
அந்தவகையில் குறித்த சந்தேக நபர் மொஹம்மட் அஸ்லம் செரீப்டீன் என்ற பெயரிலும் பின்னர் சமிந்து டில்சான் பியூமங்க கந்தனாராச்சி என்ற பெயரிலும் ஆள் அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார்.
சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டையில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிஷங்க என்ற பெயரில் காணப்படுகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM