(எம்.வை.எம்.சியாம்)
மாலைதீவுடனான இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கூட்டு முயற்சிகள் மூலம் முதலீட்டு கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் மாலைதீவிலிருந்து பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள நாம் அழைப்பு விடுக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த உயர்மட்ட இருதரப்பு உறவு எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நெருங்கிய உறவுகளுக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும்.சிறிது காலத்திற்கு முன்பு நாம் பல்வேறு தலைப்புகளில் விரிவான இருதரப்பு விவாதங்களை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.மாலைதீவுடனான எமது இருதரப்பு உறவுகளை புதிய மற்றும் மேல் மட்டத்திற்கு உயர்த்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நாம் ஆரம்பத்தில் தெரிவித்தோம்.
நமது இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது குறித்து பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.மாலைதீவுடனான இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் விருப்பத்தை நான் வெளிப்படுத்தினேன்.இது நாட்டின் பொருளாதார மீட்சி செயல்பாட்டில் இலங்கைக்கு முன்னுரிமையளிக்கிறது.
கூட்டு முயற்சிகள் மூலம் முதலீட்டு கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் மாலைதீவிலிருந்து பல்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள நாம் அழைப்பு விடுக்கிநோம்.சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில் வங்கி மற்றும் கட்டுமானம் போன்ற பல துறைகளில் இலங்கை நிறுவனங்கள் மாலைதீவில் விரிவாக முதலீடு செய்துள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம்.
கல்வி வங்கி மற்றும் சுகாதாரத் துறைகள் உட்பட மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் தங்கள் நிபுணத்துவத்துடன் வழங்கிய பங்களிப்புகளையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து குறிப்பாக விமான சேவைகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக கலந்தாசித்தோம்.
இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் மாலைத்தீவின் அர்ப்பணிப்பை நான் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றேன்.மாலைதீவில் உள்ள இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை பன்முகப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் அடையாளம் காண முடியும் என்று நம்பிக்கை உண்டு.
மாலை தீவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக இலங்கை பணியாளர்களின் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு மாலை தீவு ருஃபியா மற்றும் இலங்கை ரூபா ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சுற்றுலா எங்கள் இரு நாடுகளுக்கும் ஒரு முக்கிய பொருளாதார உந்துதலாக உள்ளது.மேலும் மாலை தீவுக்கு திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்குவதில் இலங்கை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.இந்த ஆண்டு இலங்கைக்கு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு எமது நாடுகளுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
நமது இரு நாடுகளும் இந்தியப் பெருங்கடலின் கரையோர மாநிலங்களாக இருப்பதால் மீன்பிடித் துறையில் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஆராய்ந்தோம். அரபிக்கடலுக்கு சுமூகமான அணுகலுக்காக இலங்கை மீன்பிடிக் கப்பல்களுக்கான போக்குவரத்துப் பாதையை வழங்குதல் மற்றும் மேலும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகள் பற்றிய கருத்துக்களை நாங்கள் பகிர்ந்துகொண்டோம்.
சுற்றாடல் பாதுகாப்பு கடல் வளம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இலங்கையும் மாலைதீவுகளும் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் பிராந்திய வர்த்தக முயற்சிகள் காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் நீலப் பொருளாதார உத்திகள் ஆகியவற்றில் கூட்டாக ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.மேலும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கூட்டுப் பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடினோம்.
நீண்ட கால அடிப்படையில் இரு பொருளாதாரங்களுக்கும் பயனளிக்கும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். மாலைத்தீவு மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஆதரிப்பதில் இலங்கையில் உள்ள நாங்கள் முக்கிய பங்காற்றியுள்ளோம். கல்வித்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பின் வருங்கால பகுதிகளையும் நான் முன்மொழிந்தேன்.
எங்கள் இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாடு உட்பட இளைஞர் அதிகாரம் மற்றும் விளையாட்டுத் துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM