பெப்ரவரி 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய்மொழி தின நிகழ்வு இன்று (19) காலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளை கிறிஸ்தவ நெறி ஆசிரிய மாணவி கமலினி சுதாகர் நெறிப்படுத்தினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் கலாநிதி ஆ. நித்திலவர்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி முதுமாணி கற்கைநெறி ஆசிரியர் மதுரா முகுந்தன் தாய்மொழியைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதன்போது உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி உஷாநந்தினி விமல்ராஜ் கவிதை வழங்கினார்.
கலாசாலை விரிவுரையாளர் “வேலும் மயிலும் சேந்தன் தமிழ் மரபுரிமை ஆய்வுகளும் அதன் சமகால போக்குகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கலாசாலை அதிபரின் நிறையுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM