தமிழ் திரையுலகில் சந்தை மதிப்பு உயர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும்' டீசல்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தில்லு பாரு ஆஜா..' எனும் பாடலை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரும், பின்னணி பாடகருமான சிலம்பரசன் பாடியிருக்கிறார். இதனால் இந்தப் பாடல் இசை ரசிகர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டீசல்' எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய்குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், தங்கதுரை ,கே பி வை தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் எம் எஸ் பிரபு ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேவராஜுலு மணிகண்டேயன் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் வழங்குகிறது.
இப்படத்தின் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் 'வுடு வுடு அகலு தொகுலு..' எனத் தொடங்கும் புதிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் ரோகேஷ் மற்றும் ஜி கே பி ஆகியோர் இணைந்து எழுத, நடிகரும் ,பாடகருமான டி ஆர் சிலம்பரசன் மற்றும் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
துள்ளல் இசை பாணியில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் விருந்து கொண்டாட்டங்களில் உற்சாகமாக இசைக்கப்படும் பாடல் வகைமையில் இருப்பதால் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM