தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல் : மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்பு கோரியதா? - கபீர் ஹாசிம் கேள்வி ; புலிகள் தாக்கியிருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் - அர்ச்சுனா பதில்

19 Feb, 2025 | 05:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பௌத்தர்களின் புனித தலமான  தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில்  மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்பு கோரியதா? யாழ். நூலகம் தொடர்பில் கதைக்கும் அரசாங்கம் தலதா மாளிகை மீதான தாக்குதலுக்காக சுய விமர்சனம் செய்ததா என்று ஆளும் தரப்பினரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர்  கபீர் ஹாசிம் கேள்வி எழுப்பியபோது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா  தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற  2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்,

அநுரகுமார திஸாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ். நூலகம் தொடர்பில் கூறியிருந்தார். அதற்கு தீ வைப்பதற்கு அரசியல் கட்சியொன்று உதவியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஆம் எமது தாய் கட்சியின் பெயர் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இருவர் அங்கிருந்தமையினால் அந்தக் கட்சி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு நாங்கள் கவலையடைகின்றோம். ரணில் விக்கிரமசிங்க சில வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில்  மன்னிப்புக் கோரினார்.

பௌத்தர்களின் புனித தலமான தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜே.வி.பி மன்னிப்பு கோரியதா? 

யாழ். நூலகம் தொடர்பில் கதைக்கும் நீங்கள் தலதா மாளிகை மீதான தாக்குதலுக்காக   சுய விமர்சனம் செய்தீர்களா? இதனால் உங்களுக்கு மற்றையவர்கள் தொடர்பில் கதைக்க உரிமை உள்ளதா? 74ஆம் ஆண்டுக்கான சாபத்திற்கு நீங்களே பொறுப்பாளர்கள் என ஜே.வி.பியினரை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,

யாழ். நூலகத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் இவர் கூறியிருந்தார். இந்த நிதி ஒதுக்கீட்டுக்காக அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன். அடுத்ததாக தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதலுக்கு நாங்கள் மன்னிப்பு கோரவில்லை என்று இவர் கூறியுள்ளார். அப்போது எனக்கு 7 வயதாகவே இருந்தது. அந்த சம்பவத்தை புலிகள்  செய்திருந்தால் அவர்கள் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவர்களாக இருந்தால் அந்த பிழையை அவர்கள் செய்திருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம்.

1983ஆம் ஆண்டில் இருந்து திட்டமிட்ட பாரபட்சத்தை எதிர்நோக்கியதால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது. பழையதை பேச விரும்பவில்லை. முன்னோக்கி செல்லவே விரும்புகின்றோம். இனப்பிரச்சினை தொடர்பான பேச வேண்டாம். நாங்கள் ஒரே நாடாக பயணிப்போம் என்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்,  நீங்கள்  (அச்சுனாவை நோக்கி) ஜே.வி.பி சார்பாக மன்னிப்பு கோருகின்றீர்களா? அல்லது தமிழ் மக்கள் சார்பாக மன்னிப்பு கோருகின்றீர்களா? என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து  பதிலளித்த அர்ச்சுனா, தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல் புலிகளினால்  மேற்கொள்ளப்பட்டதாக  கூறப்பட்டது. விடுதலைப் புலிகளை சேர்ந்த 55 ஆயிரம் பேர் வடக்கை சேர்ந்தவர்கள் அதனால் வட மாகாண மக்கள் சார்பாகவே மன்னிப்பு கோரினேன் என்றார்.

இவ்வேளையில் மீண்டும் பதிலளித்து உரையாற்றிய கபீர் ஹாசீம் கூறுகையில், ஜே.வி.பியினரும் தாக்குதல் நடத்தினர். அதற்காக அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்  என்பதனையே நான் கூறினேன். அவர்களிடம் இருந்தே  அவ்விதமான மன்னிப்பையே எதிர்பார்க்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து சட்ட அமுலாக்க...

2025-03-18 17:22:39
news-image

அரச சேவை ஆட்சேர்ப்புக்களுக்கு நாணய நிதியம்...

2025-03-18 15:43:59